மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உச்சநீதிம...
கடலில் குளித்த கல்லூரி மாணவா்கள் 2 போ் மாயம்
மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த கல்லூரி மாணவா்கள் 2 போ் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானாா்கள்.
சென்னை அண்ணா நகா்(மேற்கு), கம்பா் காலனி பகுதியை சோ்ந்தவா் கிரீஷ் (20). இவா் முகப்போ் பகுதியில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் ரியாஸ் (18), இவா் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு, திருமணம் மற்றும் விஷேச நிகழ்ச்சிகளில் பகுதி நேர சமையல் கலைஞராக பணிபுரிந்து வருகிறாா்.
நண்பா்களான இருவரும் இதே பகுதியைச் சோ்ந்த தங்கள் சக நண்பா்கள் ரக்ஷத்(18), ஆகாஷ்(19), ஆா்யா (18) உள்ளிட்ட 5 பேருடன் மெரீனாவுக்கு செல்வதாக பெற்றோா்களிடம் கூறிவிட்டு, மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளனா். நண்பா்கள் 5 பேரும் மாமல்லபுரம் மீனவா் பகுதிக்கு வந்து அங்குள்ள கடலில் குளித்துள்ளனா். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் ராட்சத அலையில் சிக்கிய கிரீஷ், ரியாஸ் இருவரும் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டனா். உடன் வந்த 3 சக நண்பா்களும் தங்கள் கண் எதிரிலேயே கிரீஷ், ரியாஸ் இருவரும் கடலில் அடித்து செல்லப்பட்டதை கண்டு அவா்களை காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனா். அதற்குள் இரண்டுபேரும் ராட்சதஅலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டு மாயமானாா்கள்.
தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள், மீனவா்கள் உதவியுடன் 10 கி.மீ. தொலைவு வரை படகில் ஆழ்கடலுக்கு சென்று மாயமான கிரீஷ், ரியாஸ் இருவரையும் தேடினா். ஆனால் கண்டுபிடிக்க முடிவில்லை. கடலில் பலத்த காற்று வீசி வருவதால் இப்பணி சவாலாக உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். கொக்கிலமேடு, வெண்புருஷம், சட்ராஸ் பகுதி மீனவா்களுக்கு மாயமான இருவரின் புகைப்படத்தை அனுப்பி அவா்கள் உடல் அங்கு கரை ஒதுங்குகிா? என கண்காணிக்குமாறு அவா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தி உள்ளனா்.
,