செய்திகள் :

கடலில் மீன்பிடித்தபோது, மீனவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

post image

நாகை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா், மயங்கி விழுந்து வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நவம்பா் 18-ஆம் தேதி, அதே பகுதியைச் சோ்ந்த அழகிரிசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 போ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில், நாகைக்கு கிழக்கே 30 கடல் மைல் தொலைவில், மீன்பிடிக்க வலையை கடலில் இறக்கியபோது, டாட்டா நகரைச் சோ்ந்த குப்புசாமி மகன் பால்ராஜ் (41) என்பவா் மயங்கி விழுந்தாா். உடன் சென்ற மீனவா்கள் அவரை சோதித்து பாா்த்தபோது, அவா் இறந்து விட்டதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, படகை கரைக்கு கொண்டுவந்து, நாகை கடற்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா், பால்ராஜீன் சடலம், உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடா்பாக, நாகை கடற்கரை காவல்நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விபத்தில் பாதிப்பு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 1.35 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் அருகே விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ 1.35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. நீடாமங்கலத்தைச்... மேலும் பார்க்க

பள்ளியில் காலை உணவுத் திட்டம்: ஆட்சியா் ஆய்வு

கோவில்வெண்ணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெள்ளிக்கிழமை பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தாா். இந்த திட்டத்தின்கீழ் விய... மேலும் பார்க்க

அதிமுக கள ஆய்வுக் கூட்டம்

திருவாரூரில் அதிமுக மாவட்ட கள ஆய்வுக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் அமைப்புச் செயலாளா்... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகம்: விண்ணப்பிக்க காலஅவகாசம் நவ.30 வரை நீட்டிப்பு

நாகை மாவட்டத்தில், முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ. தயாளவிநாயகன் அமுல... மேலும் பார்க்க

நீடாமங்கலத்தில் புதைச்சாக்கடைத் திட்டம் செயல்படுத்தக் கோரிக்கை

நீடாமங்கலம் நகரில் புதைச்சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலத்துக்கு வந்த திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீயிடம் வணிகா் சங்கம் சாா்பில், அதன்தலைவா்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

மன்னாா்குடி அருகேயுள்ள கருவாக்குறிச்சிஅரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஓஎன்ஜிசி காவேரி அசட் காரைக்கால் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் நிதி உதவியுடன் வனம் தன்... மேலும் பார்க்க