செய்திகள் :

கடலூர்: `கடன் கொடுத்தால் அப்படிக் கூப்பிடுவியா..?' - சீறிய இளம்பெண்... அடித்துக் கொன்ற முதியவர்!

post image

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மீதிக்குடியைச் சேர்ந்த காமாட்சிக்கும், கார்த்திக் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜெயங்கொண்டம் பகுதியில் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார் காமாட்சி. இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தையுடன் மீதிக்குடியில் இருக்கும் தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்திருந்த காமாட்சி, நேற்று காலையில் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற 64 வயது முதியவர், காமாட்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கொலை செய்யப்பட்ட காமாட்சி

ஒருகட்டத்தில் இருவருக்குமான வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் கொண்டு வந்திருந்த இரும்புக் குழாயால் காமாட்சியின் தலையில் பலமாக அடித்தார் மகேந்திரன். தொடர்ச்சியாக அடித்ததால் வலியால் அலறித் துடித்த காமாட்சி, ரத்தம் வழிய மயங்கி விழுந்து அப்படியே அடங்கிப் போனார்.

அவரது அலறலைக் கேட்டு ஓடிவந்த காமாட்சியின் தந்தை பாண்டுரங்கன், மகேந்திரனைத் தடுத்தார். ஆனால் அவரையும் மகேந்திரன் இரும்புக் குழாயால் தாக்கினார்.

அதில் பாண்டுரங்கனும் படுகாயங்களுடன் சுருண்டு விழுந்தார். அதையடுத்து முதியவர் மகேந்திரன் அங்கிருந்து தப்பிவிட, அக்கம் பக்கத்தினர் காமாட்சியையும், பாண்டுரங்கனையும் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு காமாட்சி ஏற்கெனவே உயிரிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், பாண்டுரங்கனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அண்ணாமலை நகர் காவல் நிலைய போலீஸார், தலைமறைவாக இருந்த முதியவர் மகேந்திரனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.ஜெயக்குமார், ``கொலை செய்யப்பட்ட காமாட்சி, கடந்த ஓர் ஆண்டாக கணவரை பிரிந்து குழந்தையுடன் ஜெயங்கொண்டம் பகுதியில் வாழ்ந்திருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் முதியவர் மகேந்திரன், காமாட்சியின் பெற்றோருக்கு அவ்வப்போது கடன் கொடுத்து உதவியிருக்கிறார்.

எஸ்.பி.ஜெயக்குமார்

அந்தச் சூழலில்தான் கணவரை பிரிந்து வாழும் காமாட்சி மீது மகேந்திரனுக்கு ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதை காமாட்சியிடமே நேரடியாகக் கேட்டும் இருக்கிறார். அதேபோல காமாட்சிக்கும் தனக்கும் தொடர்பிருப்பதாக ஊருக்குள் பரப்பிவிட்டிருக்கிறார்.

அதில் ஆத்திரமடைந்த காமாட்சி, மகேந்திரனுக்கு பாடம் கற்பிக்க நினைத்திருக்கிறார். அதன்படி மகேந்திரனை அவரது செல்போனில் தொடர்புகொண்டு, காட்டுமன்னார்கோயிலுக்கு வருமாறு கூறியிருக்கிறார்.

அப்படி வந்த மகேந்திரனை கடுமையாக திட்டியதுடன், `எனக்கும் காமாட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை' என அவரை பேச வைத்து வீடியோ எடுத்தார். அத்துடன் மகேந்திரனை செருப்பால் அடித்து வீடியோ எடுத்து, அதை ஊர் மக்களில் சிலருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்தக் கோபத்தில்தான் காமாட்சியை அடித்தே கொலை செய்திருக்கிறார் மகேந்திரன்" என்றார்.

``சம்பவம் நடைபெற்றபோது, `என்னை செருப்பால் அடிச்ச வீடியோவை ஏன் எல்லாருக்கும் அனுப்பி வச்ச?' என்று கேட்டிருக்கிறார் மகேந்திரன். அதற்கு, `நீ மட்டும் என்னை பத்தி ஏன் ஊரெல்லாம் போய் பொய் சொன்ன? கடன் கொடுத்தால் அப்படிக் கூப்பிடுவியா?' என்று ஆவேசமாக கேட்டிருக்கிறார் காமாட்சி. இந்த வாக்குவாதம்தான் கொலையில் முடிந்திருக்கிறது” என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.

போலீஸ் ரெய்டு: குக்கரில் சாதத்துடன் கஞ்சாவை அவித்த இளைஞர் - காட்டிக்கொடுத்த விசில்!

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பிறகு போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் விதமாக 'ஆப்ரேஷன் தூஃபான்' செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்ற... மேலும் பார்க்க

நெல்லை: `எவ்வளவு சொல்லியும் கேட்கலை...'- செல்போன் பேச்சால் ஆத்திரம்; அக்காவை கொன்ற தம்பி

நெல்லை மாவட்டம், சுத்தமல்லி மேல கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு ராமலட்சுமி என்ற மகளும், ராகுல் மற்றும் முத்துகிருஷ்ணன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். ஆறுமுகம், விவசாயம... மேலும் பார்க்க

'தகரக் கதவுகள்… பூட்டு இல்லை… ஃபிரிஸர் இல்லை' - இடியும் நிலையில் அரசு மருத்துவமனை பிணவறை கட்டிடம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மக்கள் மட்டுமில்லாமல், திருச்சுழி, காரியாப்பட்டி, கோவிலாங்குளம், கோபாலபுரம் உள்ளிட்ட... மேலும் பார்க்க

திருச்சி: காதலனுடன் விடுதியிலிருந்த இளம்பெண் மரணம்; போதை ஊசி காரணம்?

திருச்சி, அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சம் உசேன்(வயது: 19). இவர், அரியமங்கலத்தைச் சேர்ந்த 18 வயது யாஸ்மின் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். 12-ம் வகுப்பு வரை படித்துள்ள அந்தப் பெண் திருமணம் உள்ளிட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுலகத்தில் குட்கா பறிமுதல்; காங்கிரஸ் பிரமுகரிடம் விசாரணை

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கா நகரில் (ஸ்ரீரங்கம் பழைய பஸ் ஸ்டாண்டு) நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல... மேலும் பார்க்க

கோவை ஈஷா யோக மையத்தில் வாலிபர் மர்ம மரணம்; காவல் துறையின் விளக்கம் என்ன?

விழுப்புரம் மாவட்டம், சிறுவாடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர் கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில், நேற்றிரவு கார்த்திக் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மர்... மேலும் பார்க்க