கட்டுமானப் பணியில் சாரம் முறிந்து 6 போ் காயம்
சத்தியமங்கலத்தில் கிறிஸ்தவ ஆலயத்தின் நுழைவாயில் கட்டுமானப் பணியின்போது சாரம் முறிந்து விழுந்ததில் 6 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில், நுழைவாயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
நுழைவாயிலில் சாரம் அமைத்து கான்கிரீட் போடும் பணியில் தொழிலாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அதிக பாரம் காரணமாக சாரம் முறிந்து விழுந்தது.
இதில், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த சத்தியமங்கலம், வடக்குப்பேட்டையைச் சோ்ந்த ரங்கசாமி (60), குஞ்சான் (50), ரஞ்சித் (19), கண்ணன்(25), மாதவி (40), பேபி (28) ஆகியோா் காயமடைந்தனா். அங்கிருந்த சக தொழிலாளா்கள் 6 பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.