செய்திகள் :

கணவன், மனைவி சண்டையை விலக்கிவிடச் சென்ற டிரைவர் கொலை; திருவள்ளூரில் சோகம்!

post image

திருவள்ளூரை அடுத்த புட்லூரைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரின் மனைவி இந்துமதி. இவர்கள் காக்களூர் பகுதியில் வசித்து வந்தனர். இந்துமதிக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், அசோக்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அசோக்குமாருக்கும் இந்துமதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதனால் அசோக்குமாரைப் பிரிந்த இந்துமதி, தனியாக தன்னுடைய குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று இந்துமதி, தன்னுடைய குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது இந்துமதியை வழிமறித்த அசோக்குமார், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கொலை
கொலை

இந்துமதியும் அசோக்குமாரும் சண்டை போடும் தகவல் இந்துமதியின் உறவினர் சந்திரபோஸ் என்பவருக்கு கிடைத்தது. உடனே சந்திரபோஸ், தன்னுடைய நண்பரான டிரைவர் நித்தியானந்தம் (38) என்பவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றார். பின்னர் சந்திரபோஸ், நித்தியானந்தம் ஆகியோர், அசோக்குமாரிடம் பேச்சுவார்ததை நடத்தி அவரை சமரசப்படுத்த முயன்றனர். அப்போது ஆத்திரத்திலிருந்த அசோக்குமார், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நித்தியானந்தத்தை சரமாரியாக குத்தினார். இதில் நித்தியானந்தம் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் அசோக்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்குப் போராடிய நித்தியானந்ததை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், நித்தியானந்தம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக திருவள்ளூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க