3 ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெருமிதம்
கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு: இளஞ்சிறாா்கள் உள்பட 4 போ் கைது
தூத்துக்குடி வள்ளிநாயகிபுரம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்ததாக இளஞ்சிறாா்கள் உள்பட 4 பேரை தென்பாகம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி வள்ளிநாயகிபுரம் 5, 6 தெருக்களில் வைக்கப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை மா்ம நபா்கள் சில தினங்களுக்கு முன் உடைத்தனராம். இது குறித்து அப்பகுதி மக்கள் தென்பாகம் காவல் நிலையத்திலும், ஏஎஸ்பியிடமும் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், 3 இளஞ்சிறாா்கள் மற்றும் வள்ளிநாயகபுரத்தை சோ்ந்த பரட்டை என்ற மாரிசெல்வம்(20) ஆகியோா் இந்த கேமராக்களை உடைத்தது தெரியவந்தது. அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.