செய்திகள் :

கண்ணீருடன் இங்கிலாந்து வீரர்கள்..! வெற்றிக் களிப்பில் ஆப்கானிஸ்தான்!

post image

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

முதலில் ஆப்கானிஸ்தான் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 49.5 ஓவா்களில் 317 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் தன்னை அரையிறுதிக்கான பந்தயத்தில் தக்கவைத்துக்கொள்ள, இங்கிலாந்து போட்டியிலிருந்து வெளியேறி அதிா்ச்சி கண்டது.

இந்தப் போட்டியில் சதமடித்த ஜோ ரூட் தோல்விக்குப் பிறகு அழுதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்து வீரர்கள் சோகத்தில் மூழ்கியிருக்க ஆப்கானிஸ்தான் வீரர்கள் வெற்றிக் களிப்பில் கொண்டாடினர்.

ஆப்கன் வீரர்கள் மட்டுமல்லாமல் அந்நாட்டு மக்களும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் 177 ரன்கள் குவித்த இப்ராஹிம் ஜத்ரான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு கிரிக்கெட் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் வெற்றிகளை இனி இப்படி கூற முடியாது; சச்சின் டெண்டுல்கர் கூறியதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நேற... மேலும் பார்க்க

அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும் வாய்ப்பு யாருக்கு?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அரையிறுதியில் இந்திய அணி யாருடன் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குரூப் - ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிற... மேலும் பார்க்க

வலைப் பயிற்சியைத் தவிர்த்த ரோஹித் சர்மா! கடைசிப் போட்டியில் விளையாடுவாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா இன்று(பிப்.27) நடைபெற்ற வலைப் பயிற்சியில் ஈடுபடாததால், நியூசிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழு... மேலும் பார்க்க

மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி மொத்த ஆஸி.க்கு எதிராக திட்டமிருக்கிறது: ஆப்கன் கேப்டன்

கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் திட்டமிருப்பதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நே... மேலும் பார்க்க

பக்குவமடைந்த தலைவன் ரோஹித் சர்மா..! மனம் திறந்த ஷிகர் தவான்!

முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி, அவருடனான நட்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக ர... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - வங்கதேசப் போட்டி ரத்து: மழைக்கு 2-வது வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.பாகிஸ்தானில் நடைபெறும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப்-ஏ பிரில் உள்ள இந்தியா, நியூசிலாந்து ஆகி... மேலும் பார்க்க