புதுச்சேரி த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் | Photo Album
கந்தன் மலை: ``34 சென்ட்டைத் தவிர மீதமுள்ள மலை முருகனுக்குத்தான் சொந்தம்!'' - ஹெச்.ராஜா
ஹெச். ராஜா இப்போது சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். 'கந்தன் மலை' என்ற படத்தின் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குநர் வீர முருகன் இயக்கயிருக்கிறார்.
இத்திரைப்படத்தின் டிரெய்லர் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. சில சர்ச்சையான விஷயங்களையும் இந்த டிரெய்லர் உள்ளடக்கி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹெச். ராஜா, "திருப்பரங்குன்றம் விஷயம் திருத்தி கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம், 2 ஆம் தேதி ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி அங்கு சென்று, பலியிடுவது காலம் காலமாக அங்கு நடக்கிறது என்ற பொய் செய்தியை மக்கள் மத்தியில் பரப்பினார்.

வரலாற்று ரீதியாக பார்த்தால் 1310 ஆம் ஆண்டு தொடங்கி 8 ஆப்கானிய சுல்தான்கள் தமிழ்நாட்டை ஆண்டு வந்தார்கள், அதில் இறுதி சுல்தான் தான் சிக்கந்தர்.
இவர்கள் ஆட்சிக் காலத்தில் பல இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன, பல இந்து பெண்களுக்கு கொடுமைகள் நடந்துள்ளன. இதை அனைத்தையும் மறைத்து திருப்பரங்குன்றம் மலையில் தர்கா இருப்பதாக சொல்கிறார்கள்.
இது சம்பந்தமான வழக்கு 1930-ல் லண்டன் பிரிவி கவுன்சிலின் தீர்ப்பில் உண்மை வெளிப்பட்டது, அதில் 34 சென்ட்டைத் தவிர மீதமுள்ள மலை முருகனுக்குத்தான் சொந்தம் என இருக்கிறது.
அதனால் கந்தன் மலையைத் திரித்து சிக்கந்தர் மலையாக மக்களை ஏமாற்றும் வேலையை முறிக்கும் ஒரு சமூகப் படமாகத்தான் இப்படம் இருக்கும்." என்றார்.




















