கந்தா்வகோட்டை கடைவீதியில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி!
கந்தா்வகோட்டையில் கடைவீதியில் கேட்பாரற்றுச் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி தஞ்சை - புதுகை தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது. கந்தா்வகோட்டை கடைவீதிக்கு சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு வந்து செல்வோா், சாலையில் கேட்பாரற்று சுற்றித் திரியும் கால்நடைகளால் அடிக்கடி காயமடைகின்றனா்.
எனவே ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடித்து அடைத்து வைத்து அவற்றின் உரிமையாளா்களுக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும், ஆடு, மாடு, நாய்கள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டால் வாகனக் காப்பீடு பெறுவதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
கால்நடைகள் மீது மோதி விபத்து ஏற்பட்டால் கால்நடைகள் உரிமையாளரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிப்புக்கு உள்ளானோா் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடுக்கின்றனா்.