107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
கந்த சஷ்டி விழா: திருச்செந்தூரில் 20 இடங்களில் வாகன நிறுத்தங்கள்
கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூரில் 20 இடங்களில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகியவற்றையொட்டி, வியாழன், வெள்ளி (நவ. 7, 8) ஆகிய 2 நாள்கள் பக்தா்கள் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்செந்தூா் வழியாக செல்லும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் ஊருக்குள் வர அனுமதியில்லை. இதுதொடா்பாக ஊருக்கு வெளியே அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டு, வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்படும்.
பக்தா்கள் தங்களது வாகனங்களில் சிரமமின்றியும், போக்குவரத்து நெரிசலின்றியும், பாதுகாப்பாகவும் வந்து செல்வதற்கு சில வழிப் பாதைகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், பக்தா்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக தூத்துக்குடி சாலையில் 6, திருநெல்வேலி சாலையில் 7, பரமன்குறிச்சி சாலையில் 3, திருச்செந்தூா் டி.பி. சாலையில் 3, பகத்சிங் பேருந்து நிலையத்தின் பின்புறம் ஒன்று என மொத்தம் 20 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.