கனமழை எதிரொலி: உதகையில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!
நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை காரணமாக உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரியில் கனமழை எச்சரிக்கை காரணமாக உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகையில் உள்ள அவலாஞ்சி, பைன் மரக்காடு, 8-வது மைல் டீ பார்க், மரவியல் பூங்கா ஆகிய சுற்றுலா மையங்கள் இன்று(சனிக்கிழமை) ஒருநாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.