செய்திகள் :

கனமழை: சென்னை புறநகர் ரயில் சேவை குறைப்பு

post image

சென்னை புறநகர் ரயில் சேவை குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கப்படும் என்றும், வழக்கமான ரயில் சேவை குறைக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்ஜால் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும், வடகடலோர மாவட்டங்களில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால், பொதுப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் கனமழை காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது

மேலும் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

எனவே ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அதற்கேற்றவாறு தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் “ஃபெஞ்சல்” புயல்": 7 நாள்களுக்கான மழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஃபென்ஜால் புயல் மீண்டும் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே சனி... மேலும் பார்க்க

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு: வானிலை ஆய்வு மைய புதிய அறிவிப்பு

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஃபென்ஜால் புயல் மீண்டும் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. முன்னதாக 7 முதல் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் வேகம் அதிகரி... மேலும் பார்க்க

வடிகால் பணிகள் அனைத்தும் வெற்று போட்டோஷூட் விளம்பரங்கள்: இபிஎஸ் விமர்சனம்

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தல... மேலும் பார்க்க

கனமழை: சென்னையில் 6 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னை: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீட்டர் தொலை... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல், இண்டிகோ விமான சேவைகள் ரத்து

சென்னை: கன மழை காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபென்ஜால்’ புயல் புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீட்டர் தொலைவிலும், சென்னை... மேலும் பார்க்க

புயல் மழை தொடர்பான புகார்கள், உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் காலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளுக்கான தொலைபேசி எண்களை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்... மேலும் பார்க்க