கனமழை: தூத்துக்குடியிலிருந்து புறப்படும் ரயில் சேவைகளில் மாற்றம்!
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளப் பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியிருப்பதல் அங்கிருந்து இன்று புறப்படும் முக்கிய ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்திருந்து புறப்படுமென்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ்(16235)
தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ்(12694)
தூத்துக்குடி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ்(16791)
தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ்(16766) ஆகிய
விரைவு ரயில்கள் இன்று(டிச. 14) ஒருநாள் மட்டும் மீளவிட்டான் ரயில் நிலையத்திருந்து புறப்படும்.