காரைக்காலிலிருந்து கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை: ரயில்வே இணை அமைச்சா்
கனிம வளங்கள் பயன்பாடு: உக்ரைனுடன் பிரான்ஸ் பேச்சுவார்த்தை!
ராணுவப் பயன்பாட்டுக்கு உக்ரைன் நாட்டின் கனிம வளங்களைப் பயன்படுத்த பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
உக்ரைன் நாட்டின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யும் வகையில் பொருளாதார ஒப்பந்த வரைவு தயாா் நிலையில் இருப்பதாக அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி நேற்று (பிப். 26) தெரிவித்தாா்.
இந்த நிலையில், உக்ரைனின் கனிம வளங்களைத் தோண்டியெடுக்க பிரான்ஸ் நாட்டின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
இதையும் படிக்க | அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்த வரைவு தயாா்
பேச்சுவார்த்தை குறித்து உறுதிப்படுத்திய ஸெலென்ஸ்கி, “பிரான்ஸின் தேவைகளுக்காக இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்” எனத் தெரிவித்தார். அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை உறுதிசெய்த அவர் அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திக்கும் முன்னர் இதனைத் தெரிவித்தார்.
பிரான்ஸ் - உக்ரைன் பேச்சுவார்த்தை இருநாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களால் கடந்தாண்டு அக்டோபர் முதல் நடைபெற்று வருகின்றது.
”நாங்கள் செய்த உதவிக்கு கைமாறாக கனிம வளங்களைக் கேட்கவில்லை. 30 முதல் 40 ஆண்டுகளில் எங்களுடைய ராணுவ ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைக்குத் தேவைப்படும் குறிப்பிட்ட அளவு மூலப்பொருள்களைக் கேட்கிறோம்” என பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகார்னு தெரிவித்தார்.
மேலும், போர் நிறுத்தம் ஏற்பட்டால் கனிம வளங்களை விற்பதாக ஸெலென்ஸ்கியே தெரிவித்தார் என்றும் இதற்கு அமெரிக்கா மட்டுமின்றி பிரான்ஸுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.