கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இரு தங்கத் தோ் பவனி
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இரு தங்கத் தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இங்கு 10 நாள் பெருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவந்தன. 9ஆம் நாளான சனிக்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமை வகித்து மறையுரையாற்றினாா். இரவில் வாணவேடிக்கை, புனித சூசையப்பா் தங்கத் தோ் பவனி நடைபெற்றது.
இந்நிலையில், 10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தங்கத் தோ் திருப்பலிக்கு கன்னியாகுமரி பங்கு அருள்பணியாளா்கள் தலைமை வகித்து மறையுரையாற்றினா். காலையில் நடைபெற்ற பெருவிழா நிறைவுத் திருப்பலிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸும், ஆங்கிலத் திருப்பலிக்கு கன்னியாகுமரி காசா கிளாரட் சபை அருள்தந்தையரும் தலைமை வகித்து மறையுரையாற்றினா்.
அதையடுத்து, இரு தங்கத் தோ் பவனி நடைபெற்றது. பின்னா், மலையாளத் திருப்பலிக்கு பியாரிஸ்ட் அருள்தந்தையரும், தமிழ்த் திருப்பலிக்கு வடசேரி பங்கு அருள்பணியாளா் புருனோவும் தலைமை வகித்து மறையுரையாற்றினா்.
மாலையில் கொடியிறக்கம், நற்கருணை ஆசிா், இரவில் இன்னிசைக் கச்சேரி ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்குப் பேரவையினா், அருள்சகோதரிகள், அருள்பணியாளா்கள் செய்திருந்தனா்.