'கமிட் ஆனால் காசு!' - காதலை ஊக்குவித்து காசு கொடுக்கும் சீன நிறுவனம்!
சிங்கிளாக இருப்பவர்கள் கமிட்டானால் 66 யுவான் (நம்மூர் காசுக்கு ரூ.750) ரொக்க பரிசாக வழங்குகிறதாம் சீன நிறுவனம் ஒன்று.
சீனாவை சேர்ந்தது இன்ஸ்டா 360 என்னும் கேமரா கம்பெனி. இவர்கள் கம்பெனிக்கென்று ஒரு டேட்டிங் ஆப் ஒன்று உள்ளது. அந்த ஆப்பில் கம்பெனிக்கு வெளியே இருக்கும் சிங்கிள்களை ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தும். அப்படி அறிமுகப்படுத்துபவர்களை பிடித்திருந்து கமிட் ஆகி, அந்த ஆப்பில் பதிவிட்டால் 66 யுவான் பரிசு.
அந்தக் காதல் மூன்று மாதங்களுக்கு நீடித்தால், காதலர்கள் இருவர், அவர்கள் காதலுக்கு உதவி மேட்ச் மேக்கர் என மூவருக்கும் 1,000 யுவான் அதாவது ரூ.11,659 பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் சம்பந்தமாக, அந்த நிறுவனத்தின் அதிகாரி பேசும்போது, "இது எங்களுடைய ஊழியர்களின் மகிழ்ச்சி மற்றும் நலத்திற்கானது' என்று கூறியுள்ளார்.
இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அந்த ஆப்பில் 500 பதிவுகள் பதிவாகி உள்ளது. 10,000 யுவானுக்கு மேல் ஊழியர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது வரை, மூன்று மாத திட்டத்திற்கு யாரும் பரிசு வாங்கவில்லை. ஏனெனில், திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டே மூன்று மாதங்களுக்கு குறைவாகத் தான் ஆகிறது.
இந்தத் திட்டம் குறித்து ஊழியர்களிடம் கேட்கப்பட்டப்போது ஒரு ஊழியர் "என் அம்மாவை விட, என் கம்பெனி நான் கமிட் ஆவதில் ஆர்வமாக உள்ளது' என்று குறும்பாக பதிலளித்துள்ளார். இன்னொருவரோ, 'காதலுக்கு காசு கொடுப்பது சரியா?' என்று கேட்டிருக்கிறார்.
தற்போது சீனாவில் திருமணம் மற்றும் பிறப்பு எண்ணிக்கை குறைந்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு ஆர்வத்தையும், இன்னொரு பக்கம் சர்ச்சை மற்றும் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.
இந்த ஆஃபர் உங்கள் கம்பெனியில் கொடுத்தால் எப்படி இருக்கும், சிங்கிள்ஸ் பதில் சொல்லுங்க?!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...