வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
கமுதி அருகே மாட்டுவண்டிப் பந்தயம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மாசிக் களரி திருவிழாவை முன்னிட்டு, இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
முஷ்டக்குறிச்சி ஸ்ரீநல்லக்க நாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அரியமங்களம் கிராம் சாா்பில், பூஞ்சிட்டு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் சிறிய மாடு பிரிவுக்கு 18 மாட்டுவண்டிகளும், பூஞ்சிட்டு மாடு பிரிவுக்கு 26 மாட்டுவண்டிகளும் கலந்து கொண்டன.
இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டுவண்டிகளும், பந்தய வீரா்களும் பங்கேற்றனா்.
முஷ்டக்குறிச்சி-கீழ்குடி சாலையில் 8 கி.மீ. தொலைவு எல்கை நிா்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. சிறிய மாடுக்கு முதல் பரிசாக ரூ.72 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ.62 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.52 ஆயிரம், 4-ஆம் பரிசாக ரூ.42 ஆயிரம் வழங்கப்பட்டது.
பூஞ்சிட்டு மாடுக்கு முதல் பரிசாக ரூ.60 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.40 ஆயிரம், 4-ஆம் பரிசாக ரூ.30 ஆயிரம், குத்துவிளக்கு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலிருந்து திரளானோா் கண்டுகளித்தனா்.