கர்நாடக இடைத்தேர்தல்: 3-ல் ஒரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
கர்நாடகத்தில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
கர்நாடகத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்களின் தொகுதிகளில் நவ. 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. சந்தூர், ஷிக்காவன், சென்னப்பட்டணம் ஆகிய 3 தொகுதிகளில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவ. 23) காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 9.30 மணி நிலவரப்படி, சந்தூரில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஷிக்காவன், சென்னப்பட்டணம் ஆகிய இரு தொகுதிகளில் பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியும் (எஸ்) முன்னிலை வகிக்கின்றன.
இவற்றில் சந்தூர், ஷிக்காவன் தொகுதிகளில் பாஜகவும் காங்கிரஸும் நேருக்கு நேர் போட்டியில் களமிறங்கியுள்ளன.
இதையும் படிக்க:உ.பி. இடைத்தேர்தல்: பாஜக முன்னிலை!
கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நவ. 13 ஆம் தேதியிலேயே ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, பிகாரில் 4, கா்நாடகத்தில் 3, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2, கேரளம், சத்தீஸ்கா், மேகாலயம், குஜராத்தில் தலா ஒரு தொகுதி என 33 பேரவை தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிரத்தில் உள்ள நாந்தேட் மக்களவை தொகுதிக்கும், உத்தர பிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, உத்தரகண்ட் மற்றும் கேரளத்தில் தலா ஒரு தொகுதி என 15 பேரவை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.