ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் விபு பக்ரு!
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி விபு பக்ரு சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிய தலைமை நீதிபதிக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
59 வயது நீதிபதியான விபு பக்ரு இதற்கு முன்னதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார்.
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றது உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்தது.
புதிய நீதிபதி பதவியேற்பு விழாவில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் பசவராஜ் ஹொரட்டியன் மற்றும் பல மூத்த அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், மாநில அரசின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.