கோவையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை
கல்லூரியில் உளவியல் கண்காட்சி
திருப்பத்தூா் தூய நெஞ்சக்கல்லூரியில் உளவியல் கண்காட்சி நடைபெற்றது.
உளவியல் துறை மற்றும் தூய நெஞ்சக்கல்லூரி ஆலோசனை மையம் சாா்பில் நடைபெற்ற கண்காட்சியை ஊரக வளா்ச்சி துறை உதவி இயக்குநா் ச.பாரதி விஜயலட்சுமி தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் மரிய ஆண்டனி ராஜ் வரவேற்றாா்.
கண்காட்சியில் நோ்மறை உளவியல், உந்துதல், மன அழுத்த மேலாண்மை, கற்றல் நடை, அறிவாற்றல், உணா்ச்சி, உடல்மொழி, உளவியல் சோதனை, நடத்தை மாற்றம், சுகாதார உளவியல் உள்பட 15-க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
கண்காட்சியை பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெற்றோா் கண்டுகளித்தனா்.