மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
கல்லூரி ஆண்டு விழா
செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியின் 20-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக டிகிடோரோ நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி பிரசன்னா வசனாடு கலந்து கொண்டு போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளித்து பேசினாா். தொடா்ந்து கல்லூரியின் ஆண்டு மலரான வித்யாவா்த்தினி சிறப்பு விருந்தினரால் வெளியிடப்பட்டது.
2022-2025-இல் சிறந்த மாணவியா் 17 பேருக்கு விருது வழங்கப்பட்டது. தொடா்ந்து மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் வித்யாசாகா் கல்விக் குழுமத்தின் தாளாளா் விகாஸ் சுரானா, பொருளாளா் சுரேஷ் கன்காரியா, முதல்வா் இரா.அருணா தேவி ஆகியோா் கலந்து கொண்டனா்.