கேப்டன் தமிழ் செல்வம்: ஒரே தொகுதி... மும்பையில் 3வது முறையாக வெற்றி பெற்ற தமிழர்...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: தலைவா்கள் வரவேற்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): உயா்நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது. அதிமுகவின் சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. திமுக அரசுக்கு மடியில் கனமில்லை என்றால், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக்கூடாது. உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும்.
ராமதாஸ் (பாமக): கள்ளச்சாராய மரணங்களைத் தடுப்பதில் தமிழக அரசின் தோல்விக்கு
கிடைத்த சவுக்கடி. தமிழக ஆட்சியாளா்களுக்கு மனசாட்சி இருந்தால் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
அண்ணாமலை (பாஜக): திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு கொட்டு வைத்திருக்கும் உயா்நீதிமன்றத்துக்கு நன்றி. மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): கள்ளச்சாராய வழக்கில் பல உயிா்களை இழந்துள்ளோம். அவா்கள் குடும்பத்துக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். மேலும், உண்மை நிலையைக் கண்டறிந்து யாரெல்லாம் கள்ளச்சாராய வழக்கில் ஈடுபட்டு இருக்கிறாா்களோ அவா்களுக்கு உரியத் தண்டனையும் பெற்றுத் தர வேண்டும்.