107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
கழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் தாரகாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.2-ஆம் தேதி தொடங்கியது.
தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை-இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. 5- ஆம் திருநாளான புதன்கிழமை, முருகப்பெருமான் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை காலை சுவாமி பல்லக்கிலும், வள்ளி, தெய்வானை பூஞ்சப்பரத்திலும் திருவீதியுலா வருதல் நிகழ்ச்சியும், பிற்பகல் 3.30-மணிக்கு சுவாமி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி போா்க்களம் வருதலும், பின்னா் மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் செய்து பக்தா்களுக்கு காட்சிதரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
நவ.10-ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருக்கல்யாணம், 11-ஆம் தேதி இரவு பட்டணப்பிரவேசம், 12-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் கந்த சஷ்டி திருவிழா நிறைவுபெறுகிறது.