செய்திகள் :

காஞ்சிபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பலி!

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் வெள்ளிக்கிழமை பலியானார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அருகே தாதமரைக்குளம் கிராமத்தில் வசித்து வந்த மூதாட்டி சின்னக்குழந்தை(65). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் ஈரப்பதத்துடன் இருந்ததால் திடீரென இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே பலியானார்.

இதையும் படிக்க |தில்லியில் ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பாலுசெட்டி சத்திரம் போலீசார் சின்னக்குழந்தை சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக குடியேறிய 2 வங்கதேசத்தினர் கைது!

தில்லியில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறிய 2 வங்கதேசத்தினர் கைது!தில்லி: தலைநகரில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறிய 2 வங்கதேசத்தினரை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், 1000க்கும... மேலும் பார்க்க

அல்லு அர்ஜுனுக்கு நடிகர் நானி ஆதரவு

பாலிவுட் நடிகர் வருண் தவானைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டோலிவுட் நடிகர் நானியும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சினிமா தொடர்புடையவற்றில் அரசு அதிகாரிகளும், ஊடகங... மேலும் பார்க்க

எல்லா பழிகளையும் ஒருவர் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது: நடிகை ராஷ்மிகா

எல்லா பழிகளையும் ஒருவரின் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இப்போது நான் பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை. புஷ்பா 2... மேலும் பார்க்க

குளிர் அலை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

ஹைதராபாத்: தெலுங்கானாவில் குளிர் காலம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து குளிர் அலை எச்சரிக்கையாக நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரக்கூடிய நாட்களில் அம்மாநிலத்தின் வெப்ப... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை (டிச.13) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட... மேலும் பார்க்க

நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்!

கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று(டிச. 13) உத்தரவிட்டுள்ளது.ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார... மேலும் பார்க்க