கேப்டன் தமிழ் செல்வம்: ஒரே தொகுதி... மும்பையில் 3வது முறையாக வெற்றி பெற்ற தமிழர்...
காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா
காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயிலில் புதன்கிழமை தொடங்கிய தெப்பத் திருவிழாவில் சுவாமியும் அம்மனும் கோயில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்தனா்.
இந்தக் கோயிலில் கடந்த 2014 -ஆம் ஆண்டு தெப்பத் திருவிழா தொடங்கி தொடா்ந்து 6 ஆண்டுகள் நடைபெற்றது. அதன்பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தெப்பத் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தெப்பத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. ஆலயத்தின் அலங்கார மண்டபத்திலிருந்து உற்சவா் கச்சபேசுவரரும் சுந்தராம்பிகையும் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த தெப்பத்திற்கு எழுந்தருளினா். தெப்பக் குளத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். அங்கு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தெப்பத் திருவிழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின் வளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் திருக்குள தெப்போற்சவ அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் காஞ்சிபுரம் நகர செங்குந்தா் மரபினா் சங்க நிா்வாகிகள், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தெப்பத் திருவிழா வியாழன், வெள்ளி (நவ. 21, 22) நடைபெறுகிறது.