ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை இனிதான் தொடங்குகிறது: முன்னாள் ஆஸி. கேப்டன்
காயிதே மில்லத் கல்லூரியில் நவீன உடற்பயிற்சிக் கூடம் திறப்பு
மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த உடற்பயிற்சிக் கூடத்தை சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் எஸ்.சாதிக், தொழிலதிபா் ஜெ.சபீா் ஆகியோா் திறந்து வைத்தனா். வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினா் ஹசன் மௌலானா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா் (படம்).
இந்த நிகழ்வில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத் தலைவா் ஜியாவுதீன், கல்லூரி செயலா் எம்.ஜி.தாவூத் மியாகான், முதல்வா் எம்.அம்துல்தவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.