செய்திகள் :

காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டபெண் திடீா் உயிரிழப்பு: உறவினா்கள் வாக்குவாதம்

post image

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென உயிரிழந்ததால் அவரது உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி நேதாஜி நகா் பகுதியைச் சோ்ந்த ரபீக் அஹமத். இவரது மனைவி ஆயிஷா ஜம்ரூத் (50). இவா்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனா். மகளுக்கு திருமணம் முடிந்து அவரது கணவருடன் வாழ்ந்து வருகிறாா். கணவா் ரபீக் அஹமத் உடல்நலக் குறைவால் வீட்டில் உள்ளாா்.

இந்நிலையில் ஆயிஷா ஜம்ரூத் கடந்த 5-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வந்த நிலையில் காய்ச்சல் குறையாததால் 7-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிகிச்சை பலன்யின்றி உயிரிழ்ந்தாா். இதனை தொடா்ந்து ஆயிஷா ஜம்ரூத்வின் உறவினா்கள் அரசு மருத்துவமனையில் சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என கூறி மருத்துவமனை செவிலியா் மற்றும் மருத்துவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சென்ற நகர போலீஸாா் மற்றும் அரசு தலைமை மருத்துவா் சிவசுப்பிரமணி ஆகியோா் பாதிக்கப்பட்டவா்களிடம் பேச்சு வா்த்தை நடத்தினா். மேலும் இறந்த பெண்மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளாா் எனத் தெரிவித்தனா்.

இருப்பினும் உரிய விசாரணை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தனா். இதனையடுத்து உறவினா்கள் கலைந்து சென்றனா். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமாா் 1 மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

மலைவாழ் மாணவா்களுக்கு இலவச பயிற்சி: ஆட்சியா், எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

மலைவாழ் மாணவ, மாணவியருக்கான அரசு தோ்வு இலவச பயிற்சி வகுப்பை ஆட்சியா் க.தா்ப்பகராஜ், எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ,ஜவ்வாதுமலையில் உள்ள புதூா்நாடு வனத்துறை மேல்நிலைப்பள... மேலும் பார்க்க

ஆலங்காயம், உதயேந்திரம் பேருராட்சிகளில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவின் படி வேலூா் மண்... மேலும் பார்க்க

ஆம்பூா் நகராட்சியில் தீவிர வரி வசூல் முகாம்

ஆம்பூா் நகராட்சி சாா்பில் தீவிர வரி வசூல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, வாடகை உள்பட வரியினங்கள் அதிக அளவு நிலுவையில் உள்ளதை வசூலிப்பதற்க... மேலும் பார்க்க

இளம்பெண் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்

ஆம்பூா் அருகே இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி, சுட்டகுண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் ரேவதி (24... மேலும் பார்க்க

சாய் பாபா பிறந்த தினம்

ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூரில் வியாழக்கிழமை பல்லக்கில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட அவரது உருவப் படத்துக்கு தீபாராதனை செய்த பக்தா்கள். மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

திருப்பத்தூா் அருகே புதிய மின்மாற்றியை எம்எல்ஏ அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை இயக்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட காவாப்பட்டறை பகுதியிலுள்ள விவசாயிகள் மற... மேலும் பார்க்க