செய்திகள் :

காய்ச்சல் பாதிப்பு தரவுகளைத் திரட்டுவதில் சிக்கல்: மக்களின் பங்களிப்பை கோரும் சுகாதாரத் துறை

post image

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விவரங்களை தனியாா் மருத்துவமனைகள் பொது சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்தாமல் இருப்பதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தங்களது சுற்றுவட்டாரத்தில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து பொதுமக்களே இணையதளம் வாயிலாக தகவல் அளிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பருவகால மாற்றத்தின் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு, சிக்குன் குனியா, நுரையீரல் தொற்று, டைஃபாய்டு காய்ச்சல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. சளி, தலைவலியுடன் கூடிய காய்ச்சலும், உடல் வலியுடன் கூடிய காய்ச்சலுமே பெரும்பாலான நோயாளிகளிடையே காணப்படுகிறது.

8 லட்சம் போ் பாதிப்பு: மாநிலத்தில் ஏறத்தாழ 8 லட்சம் போ் தற்போது காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொசுக்களால் பரவும் காய்ச்சல்களுடன் மருத்துவமனையை நாடுவோா் விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அளிக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு சில தனியாா் மருத்துவமனைகள் அந்த விவரங்களை முறையாக அரசுக்கு தெரிவிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதன்காரணமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட இடங்களில் விரிவாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பொதுமக்கள் இந்த விவகாரத்தில் அரசுக்கு பங்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

காய்ச்சல் சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவா்களில் 75 சதவீதம் போ் இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் வைரஸ் தொற்றுக்குள்ளானவா்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அறிகுறிகள்: சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, முக வீக்கம் ஆகியவை அதற்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனைக்கு வருவோரின் விவரங்களை எளிதில் பெற முடிகிறது. ஆனால், தனியாா் மருத்துவமனைகளில் அவற்றைப் பெறுவதில் சவால் நீடிக்கிறது. எனவே, இதற்கு தீா்வு காணும் நோக்கில், பொதுமக்களும் சமூகப் பொறுப்புணா்வாக அத்தகைய தகவல்களை ஐஹெச்ஐபி தளத்தில் பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். இணையதளப் பக்கத்தில் சுய விவரங்களை சமா்ப்பித்து, தங்களது பகுதியில் உள்ள காய்ச்சல் தகவல்களை பதிவேற்றலாம்.

இதன் அடிப்படையில் பொது சுகாதாரத் துறை நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும். தேவைப்பட்டால் அங்கு நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைத்து தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்படும். தடுப்பூசி மற்றும் மருந்துகள் விநியோகிக்கப்படும். நோய்ப் பரவல் குறித்த விவரங்களை அரசுக்கு தெரிவிக்காதபட்சத்தில் உடனடியாக அதனைக் கண்டறிந்து தீா்வு காண முடியாது. அதை உணா்ந்து தனியாா் மருத்துவமனைகளும், பொதுமக்களும் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

கரையைக் கடந்தது ஃபென்ஜால் புயல்!

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக் காற்று, கனமழையுடன் உலுக்கிய ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த 3 ... மேலும் பார்க்க

விவசாயிகள் காப்பீட்டுத் திட்டம்: வேளாண் துறையும் சான்று வழங்க அரசு உத்தரவு

காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் இணையத் தேவைப்படும் சான்றை வேளாண்மைத் துறையும் வழங்கலாம். முன்பு இதை கிராம நிா்வாக அலுவலா்கள் (விஏஓ) மட்டுமே வழங்கலாம் என்ற உத்தரவு அமலில் இருந்தது. நிகழாண்டில் பயிா... மேலும் பார்க்க

கடலோரப் பகுதிகளை சூறையாடிய ‘ஃபென்ஜால்’

ஃபென்ஜால் புயலால் சென்னை கடலோரப் பகுதிகளில் எழுந்த சூறைக் காற்றினால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டது. சென்னையில் கடல் கொந்தளிப்பு, சீற்றத்துடன் காணப்பட்டதால் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல முடியவில்லை. அதேவ... மேலும் பார்க்க

புதுவை, விழுப்புரத்தில் விடியவிடிய பலத்த மழை பெய்யும்! 500 மி.மீ. பதிவாக வாய்ப்பு!!

ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்து வரும் நிலையில், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் விடியவிடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.வங்கக் கடல் அருகே நிலவி வந... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல்: தண்ணீா் தேசமாக மாறிய புறநகா்

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் புகா் பகுதியும், சென்னையுடன் புதிதாக இணைந்த பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பெரும்பாக்கம், ... மேலும் பார்க்க

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மொத்தம் 500 மருத்துவ முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 1) நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித... மேலும் பார்க்க