``ரூ.5 லட்சம் சம்பளம்; வேலை இழந்ததால் மனைவி விவாகரத்து'' - டெலிவரி பாயாக மாறிய ப...
காரின் மீது சிறுநீர் கழித்த நபரை கண்டித்த இந்திய வம்சாவளி அடித்துக்கொலை - கனடாவில் அதிர்ச்சி
கனடாவின் எட்மண்டனில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தவர் அர்வி சிங் சாகூ (55). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், அக்டோபர் 19-ம் தேதி அர்வி சிங் சாகூவும் அவரது மனைவியும் எட்மண்டனில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்திவிட்டு தங்கள் காருக்குத் திரும்பினர்.
அப்போது, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் காரின் மீது சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ந்த அர்வி சிங் சாகூ, அந்த நபரிடம் “என்ன செய்கிறீர்கள்?” என அதட்டும் தொணியில் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர், “இங்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்... நீ இங்கு என்ன செய்கிறாய்?” எனக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில், சிறுநீர் கழித்த நபர் அர்வி சிங் சாகூவின் தலையில் அடித்துள்ளார். அப்போதே அர்வி சிங் சாகூ தரையில் சரிந்தார். உடனே உடன் இருந்தவர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, அர்வி சிங் சாகூவை மருத்துவமனையில் அனுமதித்தது. அதைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களாக சிகிச்சையில் இருந்த அர்வி சிங் சாகூ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையில், தாக்குதல் நடத்தியவரை காவல்துறை கைது செய்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலின்படி, கைது செய்யப்பட்டவர் கைல் பாபின் (40). இவருக்கும் அர்வி சிங் சாகூவுக்கும் முன் எந்தவிதமான அறிமுகமும் இல்லை.
அர்வி சிங் சாகூ உயிரிழந்த நிலையில், கைல் பாபின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 4-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என கூறப்படுகிறது.



















