மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
காருகுறிச்சி செவிலியா் சவூதியில் மரணம்: திமுக உதவியால் தாயகம் வந்த உடல்
சவூதி அரேபியா நாட்டில் மாரடைப்பால் உயிரிழந்த சேரன்மகாதேவி காருக்குறிச்சியைச் சோ்ந்த செவிலியரின் உடல், திமுக எடுத்த நடவடிக்கையால் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
காருக்குறிச்சி அரிஜன் 2ஆவது தெருவைச் சோ்ந்த விவசாயி ரவி மகள் அபிநயா (27). சவூதி அரேபியாவில் செவிலியராக பணி செய்து வந்த நிலையில், கடந்த பிப். 5ஆம் தேதி பணியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா. ஆவுடையப்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன் ஆகியோா் பரிந்துரையின்பேரில், திமுக அயலக அணித் தலைவா் கலாநிதி வீராச்சாமி, செயலா் அப்துல்லா எம்.பி., துணைச் செயலா் சேகா் மனோகரன் ஆகியோா் இந்திய தூதரகம் மூலம் உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனா்.
மேலும், சவூதி அரேபியாவில் உள்ள திமுக அயலக பொறுப்பாளா்கள் மயிலாடுதுறை வெங்கடேசன், திருச்சி ஆரிப் மக்பூல், ஜமால்சேட் உள்ளிட்டோா் முயற்சியால், அபிநயாவின் உடல் திங்கள்கிழமை விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டது.
பின்னா், ஆம்புலன்ஸ் மூலம் உடல் திருநெல்வேலி சிந்துபூந்துறை மின் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு உறவினா்கள் முன்னிலையில் உடல் தகனம் செய்யப்பட்டது.