செய்திகள் :

`காருடன் கடலில் சென்ற பிரபலங்கள்' கடற்கரை பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாருக்

post image

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள். இப்பிறந்தநாளை ஷாருக் கான் தனது பண்ணை வீட்டில் வைத்து கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் ஷாருக் கான் அழைப்பு விடுத்திருந்தார். ஷாருக்கானுக்கு மும்பை அருகில் உள்ள அலிபாக் கடற்கரையில் பண்ணை வீடு இருக்கிறது.

அந்த பண்ணை வீட்டிற்கு காரில் செல்வதை விட படகில் செல்வதுதான் வசதியாக இருக்கும். எனவே பாலிவுட் நட்சத்திரங்கள் இயக்குநர் பராகான், கரண் ஜோகர், நடிகை ராணி முகர்ஜி, அனன்யா பாண்டே, அமிதாப்பச்சனின் பேரன் நவ்யா நந்தா உட்பட ஏராளமானோர் அலிபாக் பண்ணை வீட்டிற்கு நேற்றே சென்றுவிட்டனர்.

அவர்கள் படகு மூலம் அங்கு சென்றனர். தங்களுடன் காரையும் கப்பலில் எடுத்துச் சென்றனர். அவர்கள் படகில் சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோவை பராகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னை பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்ததற்கு நன்றி என்றும், இந்த அனுபவம் தனது வாழ்நாளில் சிறந்த அனுபவம் என்று இந்த அனுபவத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

ஷாருக்கான் வீட்டிற்கு வெளியில் ரசிகர்கள்

நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கி ஷாருக் கானின் பிறந்தநாள் பார்ட்டி அதிகாலை வரை நடந்தது. இதில் ஷாருக் கான் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். ஷாருக் கானுக்கு சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மும்பையில் உள்ள ஷாருக்கானின் மன்னத் பங்களாவில் நேற்று இரவே ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் நள்ளிரவில் மன்னத் பங்களாவிற்கு வெளியில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினர். துபாய், டெல்லி, கொல்கத்தா மற்றும் தென்னிந்தியாவில் இருந்து ரசிகர்கள் வந்திருந்தனர். தற்போது மன்னத் பங்களா புதுப்பித்து கட்டப்பட்டு வருகிறது. எனவே ஷாருக் கான் வேறு வீட்டில் வசித்து வருகிறார்.

Shah Rukh Khan: அம்மாவுக்கு மருந்து வாங்க காசில்லாத வறுமை; 'பாலிவுட் சாம்ராஜ்ய நாயகன்' உருவான கதை

எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் உச்சம் தொட்டவர்களின் பின்னணி கதை பெரும் பாடமாக இருக்கும். குறிப்பாக திரையுலகில் மாபெரும் இடத்தைப் பிடித்த ரஜினி முதல் விஜய் சேதுபதி வரை பலரும் பெரும் துயரத்த... மேலும் பார்க்க

Abhishek Bachchan: பணம் கொடுத்தா விருது வாங்கினேன்?- விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்

அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் 'I Want To Talk' என்ற படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதை வென்றார். ஆனால் அந்த விருதை அவர் திறமையால் வெல்லவில்லை பணம் கொடுத்தும், பிஆர் வேலைகள் செய்தும்தான் வா... மேலும் பார்க்க

"அந்தப் பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது" - விவசாயப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்

வேளாண் திருத்த மசோதாவை எதிர்த்து 2020-21-ம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமான கங்க... மேலும் பார்க்க

"8 மணிநேர வேலை வேண்டும்; நான் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும்" - ராஷ்மிகா பளிச் பதில்

ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'தி கேர்ள்ஃபிரண்ட்' திரைப்படம் நவம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதன் வெளியீட்டையொட்டி நடந்த இப்படத்தின் நிகழ்ச்சியில், சமீபத... மேலும் பார்க்க

பலூசிஸ்தான் விவகாரம்: சல்மான் கானை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்; என்ன நடந்தது?

பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் ரியாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது அவர் தெரிவித்த சில கருத்துக்கள் பாகிஸ்தானை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.மத்திய கிழக்கு நாடுகளில் இந்த... மேலும் பார்க்க

``முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை" - பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா காலாமானார்

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா இயற்கை எய்தினார். 74 வயதான இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து நேற்றைய தினம் இவரின் உடல்நிலை மோசமாகியிரு... மேலும் பார்க்க