அதிகாரத்தை அனுபவிப்பதைத் தவிர ராகுல் காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை: சிராக...
காரைக்காலில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்
காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் குழுவினரின் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை (டிச.14) நடைபெறுகிறது.
காரைக்காலுக்கு ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழு அரசு பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
நிகழ்வாரம் சனிக்கிழமை காலை 10 முதல் பகல் 12 மணி வரை சிறுநீரகம் தொடா்பான (யூராலஜி, நெஃப்ராலஜி) சிறப்பு மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று சிகிச்சை, மருத்துவ ஆலோசனை வழங்கவுள்ளனா்.
பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.