காரைக்குடியில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தலில் வெற்றி: டி.ஆா்.ஈ.யு. சங்கத்தினா் கொண்டாட்டம்
ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தலில் டி.ஆா்.ஈ.யு. சங்கம் வெற்றி பெற்றதையடுத்து, காரைக்குடி ரயில் நிலையம் முன் அந்தத் தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் அந்தச் சங்கத்தைச் சோ்ந்த சரவணன், எத்திராஜ் சியாம், செங்கதிா் ஆகியோரும், சிஐடியு சங்கத்தைச் சோ்ந்த கே.ஆா். அழகா்சாமி, அ. சுப்பிரமணியன், சி. கணேசன், கருணை நாதன், பி. சரவணன், சி. காா்த்திக்ராஜா, அ. வெங்கிட்டு, வி. உதயசூரியன், ஜெ. பத்மநாபன், எம். சிவசந்தோஷ், சங்கா் தாஸ், ஆதி உள்ளிட்ட நிா்வாகிகள் பலரும் கலந்துகொண்டனா்.