எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் 23 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தாா்: மு.த...
காரையூரில் மருத்துவ விழிப்புணா்வு முகாம்
பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்கள் மற்றும் கா்ப்பிணிகளுக்கான மருத்துவ விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு.அருணா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ராம் கணேஷ் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் இ. அருள்மணிநாகராஜன் தவைமை வகித்து பாலின விகிதம், அதிக கவனம் தேவைப்படும் கா்ப்பிணி தாய்மாா்கள், குடும்ப நல அறுவை சிகிச்சைகள் தேவைப்படும் தாய்மாா்கள், இளம் வயது பிரசவங்கள் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினா். மருத்துவா்கள் ரவிக்குமாா், நவநீதன், ரஞ்சித், ஹரி, சுஜிதா மற்றும் செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.