செய்திகள் :

கார் டயர் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

post image

திருக்கோவிலூர் அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார், சாலையோர பள்ளத்தில் விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில், மணலூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த கார், திடீரென்று டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேரில், 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக, மணலூர்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

Four members of the same family were killed when a car skidded and fell into a roadside ditch after a tire burst near Thirukovilur.

இரவில் சென்னை, 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.Chance of rain in Chennai and 19 districts at night மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரி மேடு என்னும் இடத்தில் சரக்கு வாகனங்கள், அரசு பேர... மேலும் பார்க்க

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார் !

ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது. இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்றார். இந்த கார் பந்தய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று(ஜூலை 20) தமிழகத்தில் நீலகிரி, கோவையில் கனம... மேலும் பார்க்க

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்! எங்கே? எப்போது?

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நாளை(ஜூலை 21) சேலத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை நோக்கிய தமிழக வெற்றிக்... மேலும் பார்க்க

பாமகவிலிருந்து 3 எம்எல்ஏக்கள் நீக்கம்! - ராமதாஸ் உத்தரவு

பாமகவில் இருந்து சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 எம்எல்ஏக்களை தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கறிஞர் பாலுவையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்... மேலும் பார்க்க