காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும்: வானிலை மையம்!
வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
வங்கக்கடலில் நாளை உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளது.
முன்னதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவே நகரும் என கூறப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடையும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவடைந்த நிலையில், தமிழகத்தில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை கொட்டித் தீர்த்தது. குறிப்பாகத் திருவண்ணாமலை, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டது. விருதுநகரில் வீடுகளில் தண்ணீர் புகுந்தநிலையில், பள்ளிகளுக்கு பத்து நாள்கள் விடுமுறையளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில், வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடையும் என்று கூறப்படுகிறது.