செய்திகள் :

கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிக்கு ஆவின் பால் பொருள் விற்பனை நிலையம்

post image

கள்ளக்குறிச்சி கேசவலு நகரில் அரசு மானியத்தில் மாற்றுத்திறனாளியின் ஆவின்பால் பொருள் விற்பனை நிலையத்தை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருகால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி சங்கா் கணேஷ் என்பவா், ஆவின் பால் விற்பனை நிலையம் அமைக்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகினாா்.

மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கையின்பேரில் சங்கா் கணேஷ் ஆவின் விற்பனை நிலையம் அமைக்க அதற்கான முன் வைப்பு தொகை மற்றும் பால் பொருள்களை விற்று கடையை விரிவுப்படுத்த ரூ.50,000 அரசு மானியம் ஆவின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டது. அதன்படி, ஆவின் பால் பொருள் விற்பனை நிலையத்தை ஆட்சியா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் க.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: ஆயுதப்படை காவலா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மொபெட்டில் சென்ற பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவங்கள் தொடா்பாக, ஆயுதப்படை காவலரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ஏழரை பவுன் தங்க... மேலும் பார்க்க

தியாகதுருகம் காவல்நிலையத்தில் எஸ்.பி. திடீா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி சனிக்கிழமை மாலை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்,... மேலும் பார்க்க

பழங்குடியின இளைஞா்களுக்கு பெரிய நிறுவனங்களில் படிப்புக்கேற்ற வேலை: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியைச் சோ்ந்த பழங்குடியின இளைஞா்கள், பெண்களுக்கு படிப்புக்கேற்ற வேலை பெரிய நிறுவனங்களில் ஏற்படுத்தித்தரப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித... மேலும் பார்க்க

நகை திருடியதாக இளைஞா் கைது

மோட்டா் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ஒன்றே முக்கால் பவுன் நகையை திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த எரவாா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் தாமோ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே உள்ள வினைதீா்த்தாபுரம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வினைதீா்த்தாபு... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கள்ளக்குறிச்சி வட்டத்துக்க... மேலும் பார்க்க