காவல் துறை சாா்பில் குறைதீா்க்கும் கூட்டம்
திருநெல்வேலியில் மாநகர காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி தலைமை வகித்தாா். 16 போ் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆணையா் உத்தரவிட்டாா்.