செய்திகள் :

காஸாவில் உணவுக்காகக் காத்திருந்த 50 பேர் சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்!

post image

காஸாவில் உணவுக்காகக் காத்திருந்த 50 பேரை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்ததில் இருந்து அங்கு போா் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 57,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.

மேலும் தற்போது காஸாவில் உணவு தேடி, உணவு மையங்களை நோக்கிச் செல்லும் குழந்தைகள் உள்பட அங்குள்ள மக்களை இஸ்ரேல் ராணுவத்தினர் இரக்கமின்றி சுட்டு வீழ்த்துகின்றனர்.

இந்நிலையில் இன்று(ஜூலை 19) காஸாவில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உணவு மையங்களுக்கு அருகில் உணவுக்காகக் காத்திருந்த 32 பேரும் அடங்குவர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த மே 27 முதல் இதுவரை உணவுக்காக காத்திருந்த 800 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்ட அமைப்பு, காஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் மடிந்துவிடும் பேரழிவில் உள்ளனர். 3ல் ஒருவர் பல நாள்கள் உணவின்றித் தவித்து வருவதாகக் கூறியுள்ளது.

அதேபோல அங்கு இயங்கும் ஒரு சில மருத்துவமனைகளில்கூட போதிய மருந்துகள், எரிபொருள் இல்லை. இன்குபேட்டர் இன்றி பச்சிளம் குழந்தைகள் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

இதனிடையே இஸ்ரேல் - காஸா இடையே போர்நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. காஸாவில் இருந்து மேலும் 10 பணயக் கைதிகள் விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாக டிரம்ப் இன்று கூறியுள்ளார். முன்னதாக ஓரிரு வாரங்களில் இஸ்ரேல் - காஸா இடையே போர்நிறுத்தம் வரலாம் என்று டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

50 Palestinians killed as Israel targets food aid sites in Gaza again

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அபாடன் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுதுபார்க்கும் பணியில் இ... மேலும் பார்க்க

பசுபிக் கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரஷியாவில் சுனாமி எச்சரிக்கை

ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் அடுத்தடுத்து 2 கடும் நிலநடு... மேலும் பார்க்க

‘கோமா’ நிலையில் 20 ஆண்டுகள்... சவூதி அரேபிய இளவரசர் இளம் வயதில் காலமானார்!

ரியாத்: சவூதி அரேபியாவின் இளம் வயது இளவரசர் காலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சவூதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மூத்த இளவரசர்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இரண்டே மாதங்களில் 100 குழந்தைகள் உயிரிழப்பு! பருவமழையால் பெரும் பாதிப்பு!

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமழை காரணமாக ஜூன், ஜூலையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் ஜூன் - செப்டம்பர் வரை, பருவமழையின் தாக... மேலும் பார்க்க

மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

துஷான்பே[தஜிகிஸ்தான்] : மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 20) அதிகாலை வடக்கு ஈரான் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவா... மேலும் பார்க்க

அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா

திபெத்தில் இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டும் உலகின் மிகப் பெரிய அணையின் கட்டுமானப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன. கட்டுமானப் பணிகளின் தொடக்கமா... மேலும் பார்க்க