செய்திகள் :

காஸாவில் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்த 72 பேர் சுட்டுக் கொலை!

post image

காஸாவில் உணவு உள்ளிட்ட அடிப்படை மனிதாபிமான உதவிகள் பெறக் காத்திருந்த 72 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை இன்று (ஜூலை 20) தெரிவித்துள்ளது.

இதில் 150க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் காஸாவின் பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தால் தரமட்டமாக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அங்குள்ள மக்களுக்கு பாலஸ்தீன நட்பு நாடுகள் கொடுக்கும் மனிதாபிமான உதவிகளை எல்லையில் நுழைய விடாமல் இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருகிறது.

எனினும், அமெரிக்கா - இஸ்ரேல் ஆதரவு பெற்ற ஜிஎச்எஃப் எனப்படும் காஸா மனிதாபிமான உதவி மையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் காஸாவில் உணவு போன்ற அடிப்படை பொருள்களை வழங்கி வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு குழுவாகப் பொருள்களைப் பிரித்து வழங்கும் இடத்தில், காத்திருந்த நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இந்த நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 150க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை. எனினும் இதுவரை அதிகம் தாக்குதல் நடத்தாதப் பகுதிகளில் உள்ள மக்களை அந்த இடத்தில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால், அந்த இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது.

இதையும் படிக்க | ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

73 Palestinians killed while waiting for humanitarian aid across Gaza, health ministry says

இலக்குகளை எட்டினால் உக்ரைனுடன் பேச்சு: ரஷியா

‘உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட ரஷியா தயாராகவுள்ளது; ஆனால், எங்கள் இலக்குகளை அடைவதில் எவ்வித மாற்றமும் இல்லை’ என ரஷிய அதிபரின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவி... மேலும் பார்க்க

போா் நிறுத்த பேச்சு முடக்கம்: மத்திய காஸாவிலிருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!

போா் நிறுத்த பேச்சுவாா்த்தை முடங்கியுள்ளதால், தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு மத்திய காஸாவில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது. பாலஸ்தீனத்தின் காஸா ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் தொடா் மழை: உயிரிழப்பு 200-ஐ கடந்தது

பாகிஸ்தானில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 203-ஐ கடந்துவிட்டதாக அந்நாட்டு பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த மாத இறுதியில் இருந்தே பருவமழை பெய்து வ... மேலும் பார்க்க

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டா் அளவுகோலில் 7.4-ஆக பதிவு

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகபட்சமாக அங்குள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.4-ஆக பதிவானது. 5 நிலநடுக்கங்களில் ... மேலும் பார்க்க

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அபாடன் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுதுபார்க்கும் பணியில் இ... மேலும் பார்க்க

பசுபிக் கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரஷியாவில் சுனாமி எச்சரிக்கை

ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் அடுத்தடுத்து 2 கடும் நிலநடு... மேலும் பார்க்க