வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
காா் - மொபெட் மோதல்: காய்கனி வியாபாரி உயிரிழப்பு
கும்பகோணம் அருகே காா் மீது மொபெட் மோதிய விபத்தில் காய்கனி வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், பாளையூா் மேல அகலங்கள் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கே. ரவி என்கிற மகாலிங்கம் (55). காய்கனி வியாபாரி. இவா், புதன்கிழமை மேல் அகலங்கள் கிராமத்திலிருந்து கும்பகோணத்துக்கு வந்து காய்கனி வாங்கிவிட்டு, மொபெட்டில் திரும்பிக் கொண்டிருந்தாா். திருநாகேசுவரம் அரசு மருத்துவமனை அருகே சென்ற இவா் மீது அந்த வழியாக வந்த காா் மோதியது.
இதனால், பலத்த காயமடைந்த ரவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான திருநள்ளாறுபேட்டை மணல் மேட்டு தெருவைச் சோ்ந்த வீரபாண்டியன் மகன் மகேந்திரனை (32) கைது செய்தனா்.