கிண்டி: "இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராது..." - உதயநிதி ஸ்டாலின் சொல்வதென்ன?
கிண்டி அரசு மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசியல் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இந்த சம்பவம் தொடர்பாகப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியிலிருந்த புற்றுநோய் பிரிவு மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் மீது, அங்குச் சிகிச்சையிலுள்ள ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த நபர் கொடூர முறையில் தாக்குதல் நடத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதல்களை ஒரு போதும் ஏற்க முடியாது. இது பற்றிய தகவல் அறிந்ததும், மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையை நேரில் பார்வையிட்டு, சிகிச்சை தொடர்பான விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தோம்.
மேலும், அவருடைய குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினோம். மருத்துவர் பாலாஜி அவர்கள் பூரண குணமடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு அவருக்கு அனைத்து வகையிலும் துணை நிற்கும். அவர் விரைந்து நலம்பெற விழைகிறேன். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அங்குச் சிகிச்சை செல்வோர் முழு ஒத்துழைப்பு வழங்குவதும் - அரசு மருத்துவர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
இரவு - பகல் பாராது மக்களைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்குக் கழக அரசு என்றுமே பாதுகாப்பு அரணாகத் திகழும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராதிருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb