அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா
கில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் அறிவிப்பு!
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று(ஜூலை 19) மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தமிழில் குஷி, வாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் இயக்குராக களமிறங்கியுள்ளார்.

இவர் கடைசியாக 2015-இல் இசை என்ற படத்தை இயக்கியிருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லர் என்ற புதிய படத்தை இயக்குகிறார்.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கோபாலன், ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எஸ்.ஜே.சூர்யா சார்பில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.
இந்த நிலையில், கில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று மாலை 6.09 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: குழந்தையை தூங்க வைத்த மகிழ்ச்சியில் நடனமாடிய கண்மணி மனோகரன்! வைரல் விடியோ!