செய்திகள் :

குஜராத் இடைத்தேர்தல்: முன்னிலையில் காங்கிரஸின் குலாப்சிங்!

post image

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வாவ் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குலாப்சிங் பிரபாய் ராஜ்புத் தனது நெருங்கிய போட்டியாளரும், பாஜக வேட்பாளருமான ஸ்வரூப்ஜி தாக்கூரைக் காட்டிலும் 7611 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாலன்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையைப் பதிவு செய்தனர்.

காங்கிரஸ் - 29,687 வாக்குகளும், பாஜக 22076 வாக்குகளும் பெற்றுள்ளனர். பாஜகவை விட 7,611 வாக்குகள் முன்னிலையில் காங்கிரஸ் உள்ளது.

சுயேட்சை வேட்பாளர் மவ்ஜிபடேல் 8015 வாக்குகள் பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளாக மொத்தம் 321 வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்று வருகின்றது.

நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் 70. 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாவ் தேர்தல் மும்முனைப் போராட்டமாக மாறியுள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வரின் சகோதரர் பசந்த் சோரன் தும்காவில் வெற்றி

ஜார்க்கண்ட் முதல்வரின் சகோதரர் பசந்த் சோரன் தும்கா பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் நவம்பர் 13ம் தேத... மேலும் பார்க்க

மணிப்பூரில் மேலும் 2 நாட்களுக்கு மொபைல் இணைய சேவை துண்டிப்பு!

மணிப்பூரில் 7 மாவட்டங்களில் மேலும் 2 நாள்களுக்கு மொபைல் இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், கக்சிங், பிஷ்ணுபூர், தௌபால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி ... மேலும் பார்க்க

என் மீது வைத்த நம்பிக்கையை உறுதிசெய்வேன்: பிரியங்கா காந்தி

புது தில்லி: நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றி, உங்கள் நம்பிக்கையில் நான் மூழ்கிவிட்டேன் என்று வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்... மேலும் பார்க்க

வயநாடு தொகுதி வாக்கு எண்ணிக்கை: என்ன செய்துகொண்டிருந்தார் பிரியங்கா?

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் பிரியங்கா காந்தி என்ன செய்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாக... மேலும் பார்க்க

முதல்வர் பதவிக்கு எந்த போட்டியும் இல்லை: தேவேந்திர ஃபட்னாவிஸ்!

மஹாயுதி கூட்டணியில் முதல்வர் பதவிக்கு எந்தப் போட்டியும் இல்லை என பஜக தலைவர் தேவெந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று ... மேலும் பார்க்க

மகாயுதி கூட்டணிக்கு ஆந்திர முதலவர் வாழ்த்து!

மகராஷ்டிரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தார். மேலும் பார்க்க