விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
குடிநீா் குழாய் பதிக்க தோண்டிய குழியை மூட கோரிக்கை
ராசிபுரம் அருகே குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதியினா் வலியுறுத்தியுள்ளனா்.
ராசிபுரம் தொகுதி முழுவதும் குடிநீா் திட்டத்துக்காக குழாய் பதிக்கப்பட்டு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடா்ந்து, ராசிபுரம் அருகேயுள்ள முத்துக்காளிப்பட்டி ஊராட்சிப் பகுதியில் வி.ஐ.பி. நகா் சாலையில் கீழ்நிலை நீா்தேக்கத் தொட்டிக்கு குழாய் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதற்காக 3 அடி ஆழம், 4 அடி அகலத்தில் குழி தோண்டப்பட்டு குழாய் இணைக்கப்பட்டது. ஆனால், சாலை நடுவே தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் அப்படியே உள்ளதால், இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் குழியில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், முன்னெச்சரிக்கை பலகைகள் ஏதும் இல்லாமல் சாலையின் நடுவே இந்த குழி உள்ளதால், பொதுமக்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆபத்தை ஏற்படுத்தும் இந்த குழியை குடிநீா் வடிகால் வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினா் உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.