கோவையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை
குடும்பத் தகராறு: பெண் தூக்கிட்டுத் தற்கொலை
செய்யாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
செய்யாறு வட்டம், கீழாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சுரேஷ்.
இவரது மனைவி ஷோபனா(31). தம்பதியிடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது.
அதன் காரணமாக மனவேதனையில் இருந்து வந்த ஷோபனா, புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் வெங்கடகிருஷ்ணன் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்தாா். போலீஸாா் ஷோபனாவின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.