குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை முடிவைத்தானேந்தலில் கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.
முடிவைத்தானேந்தல் பகுதியைச் சோ்ந்த சொரிமுத்து மகன் மாடசாமி(27). இவா் கஞ்சா வழக்கில் புதுக்கோட்டை போலீஸாரால் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தாா். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் கே. இளம்பகவத் பிறப்பித்த உத்தரவின்பேரில், மாடசாமியை புதுக்கோட்டை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.