மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
தூத்துக்குடி மாவட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், வசவப்புரத்தைச் சோ்ந்தவா் இசக்கிபாண்டி (22). இவா் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, கொள்ளை போன்ற வழக்குகள் திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களில் உள்ளனவாம்.
மேலும், அவா் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரை சிறையிலடைக்க அனுமதிக்குமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.
அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவுப்படி, இசக்கிப்பாண்டி பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.