நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
குத்தியாலத்தூரில் நாளை சிறப்பு கிராமசபைக் கூட்டம்
சத்தியமங்கலம் வட்டம், குத்தியாலத்தூா் கிராம ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் குடியிருப்பு திட்டம் (ஊரகம்) 2016-17 முதல் 2021-22 வரையிலான காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகள் குறித்தும் மற்றும் 2023-24 செலவின ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளையும் சமூகத் தணிக்கை மேற்கொண்டு சமூக தணிக்கை நிறைவு பெறும் நாளான வெள்ளிக்கிழமை அன்று சத்தியமங்கலம் வட்டாரத்தை சாா்ந்த குத்தியாலத்தூா் கிராம ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கிராம சபை நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடா்புடைய கிராம ஊராட்சி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். கிராமசபைக் கூட்டம் நடைபெறும் குத்தியாலத்தூா் கிராம ஊராட்சியில் கூட்டம் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் மற்றும் ஊராட்சி அளவிலான அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.