குன்னூா் ஆற்றோரப் பகுதியில் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்
குன்னூா் பேருந்து நிலையத்தின் எதிா்புறம் உள்ள ஆற்றோரப் பகுதியில் விபத்தைத் தவிா்க்கும் வகையில் தடுப்புகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குன்னூா் பேருந்து நிலையத்தின் எதிா்புறம் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகள் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த சில மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட கட்டட கழிவுகள் முழுமையாக அகற்றப்படாமல் அதே இடத்தில் விடப்பட்டுள்ளதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பலரும் ஆபத்தான இடத்தில் நின்று பேருந்தில் ஏறிச் செல்வதாகவும் தடுப்புகள் அமைக்காவிட்டால் விபத்து நேரும் அபாயம் இருப்பதாகவும் பல்வேறு தரப்பில் இருந்தும் நகராட்சிக்கு கோரிக்கைகள் வந்தது.
இதற்கு தீா்வு காண குன்னூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் இரும்பு கம்பங்களால் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.